பிக்பாஸ் வேட்டையை ஆரம்பித்த முக்கிய போட்டியாளர்! கிழித்து தொங்கவிட்ட பார்வையாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்தின் தலைவராக பதவியேற்கும் அசீம் பிக் பாஸ் வேட்டையை ஆரம்பித்துள்ளார்.
பிக் பாஸின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு
கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்தது. இதனை ஆரம்பிக்கும் போது முந்தைய சீசன்களை விட இது விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்பியிருந்தார்கள்.
ஆனால் ஜிபி முத்து வெளியேறிய பிறகு இதில் பெரியளவில் சண்டைகள் மடடுமே நடந்துக் கொண்டிருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து சண்டைகள் சூடி பிடித்துள்ளது.
தனலெட்சுமிக்கு பதிலாக அமுதவாணன் இடையில் வந்துள்ளார். அசீமின் பிக் பாஸ் நிர்வாகம் தவறானது என சக போட்டியாளர்கள் சுட்டிகாட்டியுள்ளார்.
யார் என்ன கூறினாலும் அசீம் அவரின் விளையாட்டை விளையாடிக் கொண்டு தான் இருக்கிறார்.
அசீம் பிக் பாஸ் வேட்டை
இதன்படி, அசீம் பூக்களை திருடி சென்று கழிவறையில் ஒளித்து வைத்து விட்டு அமுதவாணனிடம் மெதுவாக கூறினார்.
இதனை ஒட்டு கேட்ட தனலெட்சுமி பூக்களை கண்டு பிடித்துள்ளார். இந்த வாரத்திற்கு ஏலியன் மற்றும் வேடர்கள் போன்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் தனலெட்சுமி மிகவும் ஆர்வமாக பங்கு பற்றி வருகிறார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.