பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டாரா வடிவேலு? புது சர்ச்சையை கிளப்பி விட்ட பயில்வான்
நடிகர் வடிவேலு ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக பயில்வான் பேசிய சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலு
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வடிவேலு பார்க்கப்படுகிறார்.
ராஜ்கிரணால் சினிமாவிற்கு அறிமுகப்படுத்த இவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்த போது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து வடிவேலுக்கு போட்டியாக நடிகர் விவேக் நடித்து வந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது ஆனாலும் அவர் எதற்கும் அஞ்சவில்லை.
தரம் பார்க்காமல் தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.
இதனால் உச்ச நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இன்று வரை இருந்து வருகிறார்.
கடுமையாக சாடிய பயில்வான்
இந்த நிலையில், சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்கை துவங்கிய வடிவேலு மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். வடிவேல் பற்றிய பல செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தாலும் பெண்கள் விடயத்திலும் மிக மோசமானவர் என பயில்வான் ரங்கநாதன் பேட்டியொன்றில் பேசியுள்ளார்.
தொடர்ந்து, “ வடிவேலுவுடன் ஷீட்டிங்கிற்காக பாண்டிசேரிக்கு சென்ற போது அவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். பிறகு அந்தப் பெண்ணை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தோம். அந்தப் பெண் வடிவேலு அழைத்ததற்கு வரவில்லை. ஓபனாக சொன்னால் அந்த பெண்ணை வடிவேலு பலாத்காரம் செய்திருக்கிறார்" என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |