உங்கள் மொபைல் போனில் நெட்வேர்க் பிரச்சனை இருக்கா? அப்போ இதை பண்ணுங்க
இன்றைய அவசரமான உலகில் ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களை காணவே முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர்.
ஸ்மார்ட் போன்
ஒரு ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் போதும் உட்கார்ந்த இடத்திலிருந்து அவரவர்களின் வேலைகளை சுலபமாக செய்து முடிக்கிறார்கள்.
இவ்வாறு எல்லா வேலைகளையும் செய்கின்ற ஸ்மாட் போன்களில் சிக்னல் பிரச்சனை என்பது அடிக்கடி வரும். மொபைல் போன்களில் சரியாக நெட்வேர்க் கிடைத்தால் மட்டுமே வேலைகளை சரியாக செய்ய முடியும்.
நெட்வேர்க் பிரச்சனை இருந்தால் வேலைகளை சரியாக செய்வதில் சிரமம் ஏற்படும். அந்த நெட்வேர்க் பிரச்சனை வராமல் இருப்பதற்கு சில யுக்திகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெட்வேர்க்
உங்கள் போனில் நெட்வேர்க் வேகம் குறைவாகவோ அல்லது விட்டு விட்டு நெட்வேர்க் கிடைத்தாலோ நீங்கள் போனை ரீஸ்டார்ட் செய்யலாம். அப்போதும் வரலில்லை என்றால் உங்கள் Wi Fi மற்றும் மொபைல் டேட்டாவை மாற்றவும்.
நெட்வேர்க்கை மாற்றிய பின் டேட்டாவை நிறுத்திவிட்டு, Wi Fi ஆன் செய்து மொபைல் போனை பயன்படுத்தவும் .
இவ்வாறு செய்த பின்னும் உங்களுக்கு நெட்வேர்க் பிரச்சனை இருந்தால் இப்போது உங்கள் போனில் இருந்து சிம்கார்ட்டை கழற்றி எடுத்து அந்த சிம்மை வேறொரு மொபைல் போனில் பொருத்தி சோதனை செய்து பாருங்கள்.
இப்போது நெட்வேர்க் சரியாக வேலை செய்தால் உங்களது மொபைல் போனில் தான் பிரச்சனை. இதற்கு பின்னர் நீங்கள் உங்களின் மொபைல் போன்களின் பிரச்சனையை கடையில் கொடுத்து சரி செய்யவும்.
வேறொரு போனில் சிம் கார்ட்டை போட்டதன் பின்னும் நெட்வேர்க் பிரச்சனை இருந்தால் மொபைல் செட்டிங்கிஸ் சென்று வயர்லெஸ் மற்றும் நெட்வொர்க் செட்டிங்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்னர் மொபைல் நெட்வொர்க் என்பதை தேர்ந்தெடுங்கள். அதனை தொடர்ந்து நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் நெட்வொர் பய்னபாட்டை தேர்வு செய்யுங்கள்.
இவ்வாறு செய்தும் வராமல் சிக்கல் ஏற்பட்டால், பிளைட் மோட் ஆன் செய்து பின்பு சிறிது நேரம் கழித்து ஆஃப் செய்யுங்கள். இது நெட்வேர்க் சீராக செயல்பட உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இதற்கு பிறகும் உங்கள் போனின் நெட்வொர்க் பிரச்சினை சரி செய்யப்படவில்லை என்றால், உங்கள் மொபைல் சமீபத்திய OS உடன் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் லேட்டஸ்ட் OS மூலம் அப்டேட் செய்யுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |