இலங்கையில் நடந்த அதிர்ச்சி...திடீரென்று செத்து மடிந்த உயிர்கள்!
இலங்கையில் மட்டக்களப்பு - தௌலானை பகுதியில் மின்னல் தாக்கி 30 மாடுகள் ஒரே தடவையில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப்பகுதியான தௌலானை மேய்ச்சல் தரை பகுதியில்மரங்களின் கீழ் நின்ற 30 மாடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளது.
இரண்டு கால் நடை பண்ணையாளர்களின் மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கால்நடை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பொருளாதார சிக்கலினால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் அடிக்கடி இது போன்ற அசம்பாவிதங்களும் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.