நீரிழிவு நோயினை குணமாக்கும் பார்லி... எவ்வாறு சாப்பிட வேண்டும்?
நீரிழிவு ஒரு தீவிரமான நோயாகும். இது ஒவ்வொரு ஆண்டும் எண்ணில் அடங்காத அதிகமான மக்களின் உயிரை பறித்து வருகின்றது.
வயது வித்தியாசம் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். நீரழிவு நோய் வருவதற்கு முன்பு நாம் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.
ரத்த ஓட்டத்தில் உள்ள குளுக்கோஸ் அனைத்தும் உடலால் செயல்படுத்த முடியாதபோது இந்த நோய் ஏற்படுகிறது.
இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமல் அல்லது சரியாக வேலை செய்யாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது, இதனால் நமது இரத்தத்தில் குளுக்கோஸ் சேருகிறது.
நாளுக்கு நாள் நீரழிவு நோயாழிகள் அதிகரித்து வருகின்றனர். இந்த ஆபத்தான நோயை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு சிறிய வழி முறையை இந்த பதிவில் பார்கலாம்.

பார்லி நீர்
பார்லி நீர் இது ஒரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். இயற்கையாகவே நமது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க இது உதவுகிறது.
இது நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
பார்லி நீரில் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் ஆபத்தை குறைக்கிறது.

இந்த நீரை குடிப்பதால் ரத்த குளுக்கோஸ் அளவு குறிப்பிடத்தகுந்த அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.
மேலும் பார்லியில் பயோ ஆக்டிவ் காம்பவுண்டுகள் அதிகமாக இருக்கிறது. பார்லியை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது .
குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து, நச்சுநீக்கும் பண்புகள் என பலவும் பார்லியில் இருக்கிறது.
இந்த பானத்தை நீங்கள் மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.
தினமும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை இந்த பானத்தை குடித்தால் உங்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |