ரத்தம் வழிய பாரதி! யாரும் எதிர்பாராத திருப்பத்துடன் பரபரப்பு ப்ரோமோ! முடிவுக்கு வரப்போகிறதா பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பாரதியின் ஒட்டு மொத்த மருத்துவமனையும் தீவிர வாதிகளால் கடந்த சில தினங்களாக ஹைஜாக் செய்யப்பட்ட நிலையில், ஒருவழியாக பல்வேறு சிக்கல்களை கடந்து பிணைக்கைதிகளாக இருந்த அனைவரையும் அதிரடி படையை சேர்ந்த போலீசார் காப்பாற்றி பத்திரமாக வெளியே கொண்டு வருகிறார்கள்.
அப்போது, பாரதி மட்டும் மிஸ் ஆவதை உணர்ந்த கண்ணம்மா அவரை அழைத்து வர மீண்டும் மருத்துவமனைக்கு உள்ளே செல்கிறார்.

அங்கு தீவிரவாதிகளால் அடித்து துன்புறுத்தப்பட்ட நிலையில் முகத்தில் ரத்தம் வழிய, கைகள் கட்டப்பட்ட பாரதியை பார்க்கிறார்.
கண்ணம்மாவை கண்டதும் அங்கிருந்து செல்லும் படி கண்ணம்மாவை பாரதி வற்புறுத்தி, தன் மேல் பாம் கட்டப்பட்டிருக்கும் தகவலை கூறுகிறார்.
அனால் பாரதியை விட்டு செல்ல மனம் இல்லாத கண்ணம்மா, போனால் இருவரும் வெளியே செல்வோம் அல்லது இருவரும் இணைந்து இறந்து விடுவோம் என அவரை கட்டி அணைத்து கொள்கிறார்.
இந்தனை பார்த்த ரசிகர்கள் இருவரும் இறந்து போவதுடன் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகின்றதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.