திடீரென பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மருத்துமனையில் அனுமதி.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கர் திடீரென திடீரென மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழர்களின் சிறப்பான தனித்தன்மையில் ஒன்றாக இருப்பது பட்டிமன்றம். உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதில்லை.
தமிழுக்கே உள்ள ஒரு சிறப்பான சொல்லாற்றல் மிகுந்ததாகவும், நல்ல சுவை மிகுந்ததாகவும், சமூகத்துக்கு நல்ல கருத்துகளை தெரிவிக்க வருவதாகவும் இருப்பது பட்டிமன்றம். இந்த பட்டிமன்றத்தில், சாலமன் பாப்பையா முதலில் அனைவரும் நினைவுக்கு வருவார்.
அவருக்கு அடுத்தபடியாக பட்டிமன்றப் பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர் நினைவுக்கு வராமல் இருக்க மாட்டார். அந்த அளவிற்கு அவரின் பேச்சின் திறமையும், தனித்தன்மையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும்.
இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவரது ரசிகர்கள் விரைவில் குணமடைந்து வரவேண்டும்