வளையல் விற்கும் பெண்ணின் சரளமான ஆங்கில பேச்சு... தெறிக்கவிடும் காட்சி
கோவாவில் வளையல் விற்கும் பெண் ஒருவர் மிகவும் சரளமாக அமெரிக்கன் ஆங்கிலத்தை பேசி அசத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வளையல் விற்கும் பெண்ணின் ஆங்கிலம்
இந்தியாவில் பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கின்றது கோவா மாநிலம். ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கறுப்பு பாறைகள் மற்றும் அழகிய நீருக்கு பெயர் பெற்றது வாகடர் கடற்கரை, கோவாவின் அதிக நெரிசலான கடற்கரைகளுக்கு மத்தியில் அமைதியான இடத்தை தேடும் சுற்றுலாப் பயணிகளுக்கு நீண்ட காலமாக புகலிடமாக இருந்து வருகிறது.
இந்த கடற்கரையில் வளையல் விற்கும் பெண் ஒருவர் சரளமாக ஆங்கிலம் பேசியுள்ளார். இன்ஸ்டாகிராமில் சுஷாந்த் பாட்டீல் என்ற நபர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு கோவா கடற்கரையின் மாற்றம் குறித்த தனது கருத்துகளை அந்த பெண் சரளமாக ஆங்கிலத்தில் தெரிவிக்கிறார்.
அந்த வீடியோவில், பெண் வளையல்கள் மற்றும் மணிகள் கொண்ட நெக்லஸ்களை விற்கிறார். கடற்கரையின் மாறும் நிலப்பரப்பை வீடியோவில் ஆங்கிலத்தில் சரியாக விவரிக்கிறார்.
இந்த பெண்ணின் ஆங்கில திறனை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆங்கிலம் என்பது வெறும் மொழி தான் அது அறிவு இல்லை என்பதை இந்த பெண் மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |