கர்நாடகாவில் கனமழை- கொத்துக்கொத்தாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்க நகைகள்
கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் கோடிக்கணக்கான தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்க நகைகள்
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகள், சாலைகள் மற்றும் வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதுவரை இந்த கனமழைக்கு 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பெங்களூருவில், மல்லேஸ்வரம் என்ற இடத்தில் ஒரு நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடைக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது.
அப்போது, கடையில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் கடையில் இருந்த ரூ.2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் தங்க நகைகள் அடித்துச் செல்லும்போது உரிமையாளர் மற்றும் ஊழியர்களாலும் எதுவும் செய்ய முடியாமல் தவித்தனர்.
இது குறித்து கடை உரிமையாளர் கூறும்போது, எங்கள் கடையில் 80 சதவீத நகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. நனைந்த நிலையில் எஞ்சிய நகைகள் மட்டுமே எங்களால் மீட்டகப்பட்டன என்று வேதனையோடு தெரிவித்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையிலிருந்து அடித்துச் செல்லப்பட்ட நகைகளை மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும், மாநகராட்சியின் உதவியை நாடியுள்ளனர்.