வாழைப்பழத்தில் பூரி செய்து சாப்பிடுங்கள்!
பொதுவாக காலை, இரவு நேரங்களில் பூரி செய்து உண்பது இயல்பானது. அதை சற்று வித்தியாசமான முறையில் செய்து உண்டால் எப்படியிருக்கும். இதோ வாழைப்பழ பூரி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 1
கோதுமை மா - 1 1/2 கப்
தயிர் - 1 மேசைக்கரண்டி
சீனி - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
செய்முறை
முதலில் வாழைப்பழம், சீனி, தயிர், ஏலக்காய் தூள் என்பவற்றை சேர்த்து அரைக்கவும்.
அதன் பின்னர் கோதுமை மா, சமையல் சோடா, சீரகம் என்பவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்த பின்னர் அரைத்து வைத்துள்ள வாழைப்பழ விழுதை அதனுடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அதன் பின்னர் மாவை பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூரிகளை பொரித்தெடுக்கவும். அருமையான வாழைப்பழ பூரி தயார்.