அடடா.. வாழைப்பழத்தோலில் இவ்வளவு நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே
மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் என்று சொல்லலாம். வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. வாழைப்பழத்தில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
மேலும், வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். நாம் எல்லோரும் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம்.
ஆனால், நாம் தூக்கி எரியும் அந்த வாழைப்பழத்தின் தோலில் எவ்வளவு நன்மைகள் இருக்குன்னு தெரியுமா? அதை தெரிந்து கொண்டால், இனி வாழைப்பழ தோலை நீங்கள் தூக்கி எரிய மாட்டீர்கள்.
சோரியாஸிஸ் நோய்
சோரியாஸிஸ் நோய்யால் சிலருக்கு சருமம் சிவந்து தடித்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத் தோலை எடுத்து சிவந்து தடித்த இடத்தில் தடவினால் எரிச்சல் நின்று, முகம் பழைய நிலைமைக்கு வரும்.
பருக்கள்
ஒருவருக்கு பருக்கள் முகத்தில் இருந்தால் சருக அழகு இருக்காது. அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத் தோலை பருக்கள் மீது வைத்து தேய்க்க வேண்டும். இப்படி தொடர்ந்து வாழைப்பழத் தோலை தேய்த்து வந்தால் முகம் பொலிவடையும்.
கண்களுக்கு
இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கும், இரவில் நீண்ட நேரம் படிப்பவர்களுக்கும் கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத்தோளை, கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தடவி வந்தால் நாளடைவில் கண்களை சுற்றி இருந்த கருவளையம் மாயமாக மறையும்.
முக சுருக்கத்திற்கு
முகத்தில் சுருக்கம் இருப்பவர்கள் வாழைப்பழத் தோளை இரவில் தேய்த்து, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் நாளடைவில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |