உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பழ குழிப்பணியாரம்... பத்தே நிமிடத்தில் செய்யலாம்
எடை குறைக்க விரும்புவோருக்கு வாழைப்பழம் மிகவும் சிறந்த தெரிவாக இருக்கின்றது.ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.
இதன் விளைவாக, அவற்றை சாப்பிட்டால், விரைவில் பசி எடுக்காது. நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்கும்.
அதிக கலோரிகளை உட்கொள்வதால் ஆபத்து இல்லை.உடல் எடையை எளிதில் குறைக்கலாம் என சுகாதார நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர்.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட வாழைப்பழத்தை கொண்டு ஆரோக்கியம் நிறைந்த குழிப்பணியாரம் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
வாழைப்பழம் - 2
நாட்டு சர்க்கரை - 1/2கப்
ஏலக்காய்த் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - 1/4 தே.கரண்டி
செய்முறை
முதலில் வாழைப்பழத்தின் தோலை உரித்து சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு போன்று நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த மாவினை மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் குழி பணியார கல்லை வைத்து குழிகளில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி அதனை நன்றாக சூடாக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மாவை பணியார குழிகளில் ஊற்றி 2 நிமிடங்களுக்கு மூடி வேகவைக்க வேண்டும். இரண்டு நிமிடங்களுக்கு பின்னர் பணியாரங்களை திருப்பி போட்டு மறுபுறமும் நன்றாக வேக வைக்க வேண்டும்.
இரண்டு பக்கங்களும் நன்றாக மொறுமொறுவென்று வெந்ததும் பணியாரங்களை எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றினால் ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ குழிப்பணியாரம் தயார். அதனை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |