எல்லாவிதமான சருமத்துக்கும் வாழைப்பழ Face Pack
Skin Care
By Sinduja
அழகை மேம்படுத்திக்கொள்ள யாருக்குத்தான் பிடிக்காது? இருப்பினும் அதற்கான முயற்சிகளை எடுப்பதில் பலரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
சிறிய விடயமென்றாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை விரயமாக்குவதை விடுத்து, வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே முகத்துக்கான அழகை மேம்படுத்திக் கொள்ளலாம்.
அதிலும் எல்லோராலும் எளிதாக பெற்றுக்கொள்ளக் கூடிய வாழைப்பழத்தைக் கொண்டு எந்த எந்த சருமத்துக்கு எவ்வாறான ஃபேஸ் பெக்குகள் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்...
எண்ணெய் பசை சருமத்துக்கானது...
தேவையான பொருட்கள்
- வாழைப்பழ பேஸ்ட் - 2 தேக்கரண்டி
- முல்தானி மெட்டி - 1 மேசைக்கரண்டி
- விட்டமின் ஈ கெப்ஸ்யூல் - 1
- ரோஸ் வோட்டர் - சிறிதளவு
எவ்வாறு பயன்படுத்துவது?
- ஒரு பௌலில் வாழைப்பழ பேஸ்ட், முல்தானி மெட்டி, விட்டமின் ஈ கெப்ஸ்யூல், ரோஸ் வோட்டர் என்பவற்றை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி காய வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
சென்சிடிவ் சருமத்துக்கானது...
தேவையான பொருட்கள்
- மசித்த வாழைப்பழம் - 2
- டீ ட்ரீ ஒயில் - 2 துளிகள்
- கற்றாழை ஜெல் - 1 மேசைக்கரண்டி
எவ்வாறு பயன்படுத்துவது?
- மசித்த வாழைப்பழம், கற்றாழை ஜெல், டீ ட்ரீ ஒயில் என்பவற்றை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
- பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
வறண்ட சருமத்துக்கானது...
தேவையான பொருட்கள்
- கனிந்த வாழைப்பழம் - 1
- தயிர் - 1 தேக்கரண்டி
- தேன் - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எவ்வாறு பயன்படுத்துவது...
- வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
- வாழைப்பழத்துடன் தேன்,தயிர், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- பின்னர் முகத்தை கழுவி விட்டு, தயாரித்து வைத்திருக்கும் பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- இறுதியாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US