கழுத்து கருமையா இருக்கு என்ற கவலையா? இதெல்லாம் செய்திடுங்கள்
Skin Care
By Sinduja
சிலரது முகம் பார்ப்பதற்கு சிவந்த நிறத்திலும் அழகாகவும் இருக்கும்.
ஆனால், கழுத்து கருமையாகவும் பார்ப்பதற்கு பொலிவிழந்தும் காணப்படும்.
அதனால் பலர் ஒருவித மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பர்.
முகம் ஒரு நிறமாகவும் கழுத்து இன்னொரு நிறமாகவும் காணப்படுவது பார்ப்பவர்களுக்கும் சரி குறித்த நபருக்கும் சரி மிகுந்த கூச்சத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
வெயிலில் அலைவது, செயின் அணிந்திருப்பது, கழுத்துப் பகுதியை சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்றவற்றால் கழுத்துப் பகுதி கருமையாக இருக்கலாம். இருந்தாலும் இது கவலைக்குரிய விடயமொன்றுமல்ல. இதை இலகுவாக சரி செய்து விடலாம்.
கழுத்து கருமை மறைய எளிய வழிகள்
- எலுமிச்சை சாறு, சிறிது தேன் இரண்டையும் கலந்து தேய்த்தால் கழுத்து கருமை நீங்கும்.
- பயத்தம் மா, ரோஸ் வோட்டர், ஒலிவ் ஒயில் என்பவற்றை கழுத்தில் பூசினாலும் கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
- பப்பாளி, எலுமிச்சை, ஒரேஞ்ச் என்பவற்றின் தோல்களை நீக்கி கழுத்தைச் சுற்றி தேயத்தாலும் கருமை குறையும்.
- கற்றாழையின் சதையை எடுத்து கழுத்து முழுவதும் பூசிவிட்டு பின்பு கழுவி விடவேண்டும்.
- தயிரை எடுத்து கழுத்துப் பகுதி முழுவதிலும் மசாஜ் செய்து இருபது நிமிடங்கள் கழித்து தண்ணீரில் துடைத்து எடுக்க வேண்டும்.
- உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்து கழுத்துப் பகுதியில் தேய்த்தாலும் கருமை மாறும்.
இவ்வாறு வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு இலகுவாக கழுத்துக் கருமையை போக்கலாம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US