viral video:அசுர வேகத்தில் தோலை அகற்றும் பந்து மலைப்பாம்பு! இது செல்லப்பிராணியா?
பந்து மலைப்பாம்பொன்று (Ball Python)அசுர வேகத்தில் தனது தோலை கழற்றும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
செல்லப்பிராணிகளை அதன் குணாதிசயங்களை அடிப்படையாக கொண்டு தான் அதிகமானோர் வளர்க்கின்றனர். செல்லப்பிராணி வளர்ப்பது மன அமைதியையும் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நாய், பூனை, மீன், கோழிகளைத்தான் அதிகமாக செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். ஆனால் சில நாடுகளில் பாம்புகளையும் வளர்க்கின்றனர்.
அப்படி பாம்பு வகைளில் மிகவும் பிரபல்யமான செல்லப்பிராணியாக அறியப்படுவது தான் இந்த பந்து மலைப்பாம்பு.
அது மிகவும் தோழமை உணர்வு கொண்டதாகவும், மனிதர்களுடன் விரைவில் நட்புகொள்ளும் பாம்பாகவும் பார்க்கப்படுகின்றது.
இந்த வகை பாம்புகளின் தாயகமாக மேற்கு மத்திய ஆபிரிக்கா அறியப்படுகின்றது. இது எலிகளையும் சில வகை பறவைகளையும் விரும்பி சாப்பிடுகின்றது.
அதனை யாரும் அச்சுறுத்தினால் எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள தன் உடலை பந்து போல் மாற்றிக்கொள்ளும் இயல்பை கொண்டுள்ளதாலேயே இதற்கு பந்து மலைப்பாம்பு என்று பெயர் வந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |