I Love You! பிரபல இசையமைப்பாளருடன் நெருக்கமாக பாலாவின் முன்னாள் மனைவி
பிரபல இசையமைப்பாளரை கணவர் என சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார் பாலாவின் முன்னாள் மனைவியான அம்ரிதா.
இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா, மலையாளத்தில் புகழ்பெற்ற பாடகி ஆவார்.
12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இத்தம்பதியினர், கடந்தாண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில் பாலாவும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், இசையமைப்பாளர் கோபி சுந்தரை அம்ரிதா காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தது.
சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அம்ரிதா, அப்புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டதுடன் கோபி சுந்தரை கணவர் என குறிப்பிட்டுள்ளார்.
அதில், உனக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை, என் கணவரே, நீங்கள் சிறப்பானவர், இன்று என்னுடைய மிகச்சிறப்பான நாள் என குறிப்பிட்டுள்ளார்.