மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சிரித்தப்படி திருமணத்தில் பங்கேற்ற இயக்குநர் பாலா!
மனைவியை விவாகரத்து செய்ய பின்னர் சிரித்தப்படி திருமணத்தில் பங்கேற்ற இயக்குநர் பாலாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்துள்ளார்.

இந்த திருமணத்தில் இயக்குநர் பாலா, முத்துமலர் மற்றும் மகள் பிரார்த்தனா ஆகியோர் பங்கேற்றுள்னர். முத்துமலரும் பிரார்த்தனாவும் ஒன்றாக திருமணத்திற்கு வந்திருந்தனர். பாலா தனியாக சென்றிருந்தார்.
மார்ச் 5ஆம் தேதிதான் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். விவாகரத்து பெற்ற கையோடு திருமணத்தில் பங்கேற்ற இருவரின் முகத்திலும் எந்த சலனமோ வருத்தமோ இல்லை. உறவுகளை பார்த்து சிரித்தப்படி திருமண வைபவத்தில் பங்கேற்றனர்.
திருமணத்தில் பங்கேற்றிருந்த நேரத்தில் மகள் பிரார்த்தனாவை அருகில் அமர வைத்து பாலா பேசியுள்ளார்.
அப்போது பாலாவின் முன்னாள் மனைவியான முத்துமலர் தலையை ஆட்டியப்படி பாடலை ஜாலியாக கேட்டு ரசித்தப்படி இருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.