இரண்டு ஜோடி வாழ்க்கை க்ளோஸ்? நினைத்து பார்க்க முடியாத கிளைமேக்ஸில் பாக்கியலட்சுமி!
பாக்கியலட்சுமி சீரியலில் நினைத்து பார்க்க முடியாத காட்சிகள் வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இன்றைய தினம் எபிசோட்டில் வீட்டில் கணேசன் அப்பா, அம்மா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அமிர்தாவின் அம்மா வருகிறார்.
இருவரையும் பார்த்து “ என்னுடைய பெண்ணை தயவு செய்துவிட்டு விடுங்கள் அவள் இப்போது தான் சந்தோசமாக வாழ ஆரம்பித்து இருக்கிறாள்.
மீண்டும் அவள் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்.” என அழுது கொண்டே பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து இப்போது தான் நிலா எழிலை அப்பா என கூப்பிட ஆரம்பித்து இருக்கிறாள். அவளிடம் சென்று உன் அப்பா வேறு என எப்படி கூற முடியும்.” என்கிறார்.
இரண்டு டுவிஸ்ட்
அதற்கு கணேஷ், “ நான் தான் அப்பா. கண்டவனை எதுக்கு அப்பானு கூப்பிடணும் என்னை தான் கூப்பிடணும் ” என கத்துகிறார்.
பின்னர் அமிர்தாவின் அம்மா கடைசியாக, தயவு செய்து என் பொண்ணை நிம்மதியா வாழ விடு என்கிறார்” என அழுகிறார். இப்படி பேசுவதை கேட்ட கணேஷ் அமைதியாக அதிர்ச்சியடைந்தப்படி நிற்கிறார்.
இது ஒரு புறம் இருக்கையில், மயூ கோபியை பார்த்து “டேடி” என கூப்பிடுகிறாள். கோபமடைந்த ஈஸ்வரி,“ யாருக்கு யாரு டேடி ஒனக்கு அங்கு மூனு பிள்ளைங்கள இருக்கு..” என அழுத்தமாக கூறுகிறார்.
இதனை தொடர்ந்து ராதிகாவிற்கும், மயூவிற்கு மனமுடைந்து செல்கிறது. பெற்றார்கள் செய்யும் தவறுகளுக்கு பிள்ளைகள் அனுபவிப்பது கஷ்டமாக தான் இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |