இது உலக மகா நடிப்புடா சாமி.. கோபியால் அதிர்ந்த நெட்டிசன்கள்! பாக்கியலட்சுமியில் டுவிஸ்ட்
பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகி வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
முன்னாள் காதலியுடன் தொடர்பு
இல்லத்தரசி தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு உருவாகும் சீரியல் பாக்கியலட்சுமி.
இவரது கணவர் கோபி, வேண்டாவெறுப்பாக பாக்கியலட்சுமியுடன் வாழ முன்னாள் காதலியுடனான ராதிகாவுடன் பழக்கம் ஏற்படுகிறது.
அவரும் கணவரை பிரிந்து வாழ, நெருங்கி பழகும் கோபி, பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்ய நினைக்கிறார்.

இதற்காக பாக்கியலட்சுமியை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதுடன் நீதிமன்றம் வரை செல்கிறார்கள்.
இதற்கிடையே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாத்தாவும், எழுந்து நடக்க முயல்கிறார்
சமீபத்திய வைரல் புரோமோ
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
இந்த ப்ரோமோவில், நான் வீடியோ காலில் வருகிறேன் என்று போனை கட் செய்த ராதிகா வீடியோ கால் செய்கிறார்.
அப்போது அவரிடம் உடம்பு சரியில்லாதது போன்று நடிக்கும் கோபி, தன்னைப் பார்த்துக் கொள்ள வீட்டில் யாரும் இல்லை என்று நடிக்கிறார்.

அதைப்பார்த்து பரிதாபப்பட்ட ராதிகா நீங்கள் இங்கே வந்து விடுங்கள் நான் உங்களை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுவதோடு, நான் வேண்டுமென்றால் அங்கு வந்து உங்களை அழைத்து வரட்டுமா என்று கேட்கிறார்.
அதைக்கேட்ட கோபி, அய்யயோ நானே எப்படியாவது கஷ்டப்பட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி குஷியாகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, கோபி கதாபாத்திரத்துக்கு நீங்கள் தான் பொருத்தமானவர், மாஸ் காட்டுறீங்க என்றெல்லாம் கமெண்டுகள் வந்து குவிகின்றன.

சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்கு பலன்கள் அதிகம்?