மஞ்சுளாவிற்கு விஜயகுமார் செய்த துரோகம்! பயில்வான் பரபரப்பு பேச்சு
நடிகர் விஜயகுமார் மஞ்சுளாவிற்கு துரோகம் செய்ததாக பயில்வான் ரங்கநாதன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பயில்வான்
திரைப்பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்கை முறையை பற்றி விமர்சிப்பதில் பயில்வான் பெயர் போனவர்.
இதை அவர் தன் முழுநேர வேலையாக பார்த்து வருகின்றார், பல ரகசியங்களை வெளியிட்டு பல கதைகளை வாங்கியும் அவர் அடங்கவில்லை.
அந்த வகையில் தான் மஞ்சுளாவையும் விஜயகுமார் பற்றியும் ஒரு புது கதையை பேசியுள்ளார்.
அந்த வகையில் அவர் பேசும் போது 'மஞ்சுளா ஒரு நடிகையாவார் இவர் எம். ஜி. ஆர் உடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இவரை விஜயகுமார் தன் முதல் மனைவி சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மஞ்சுளா விஜயகுமார் தம்பதிகளுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
மூத்த மனைவிக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த பிள்ளைகளில் அனிதா நன்றாக படித்து மருத்துவராக உள்ளார். இவரின் மகளுக்கு தான் சமீபத்தில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
கவிதா ஒரு படம் மட்டும் நடித்து விட்டு திருமணமாகி செட்டிலாகி விட்டார். இப்படி மூத்த மனைவியின் மகள்கள் மட்டும் படித்து நல்ல படியாக செட்டிலாகி விட்டார்கள். ஆனால் மஞ்சுளாவின் மகள்களை மட்டும் விஜயகுமார் ஏன் படிக்க வைக்காமல் நடிகைகளாக மாற்றினார்.
மஞ்சுளா தன்னுடைய பாதுகாப்பிற்காக விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரை விட அதிகமாக சொத்து மதிப்பு கொண்டிருந்தவர் மஞ்சுளா தான்.
விஜயகுமார் ரஜனியை வைத்து படம் எடுத்த போது மஞ்சுளா தனக்கு சொந்தமான 'குட் லக்' தியேட்டரை விற்று பணம் கொடுத்தார். இவ்வாறு மஞ்சுளாவை விஜயகுமார் பயன்படுத்தியிருக்கிறார்.
அப்படி இல்லை என்றால் மூத்த மனைவியின் மகள்களை படிக்க வைத்த இவர் ஏன் மஞ்சுளாவின் மகள்களை டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக்கவில்லை' என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |