நான் புகைப்பழக்கத்தை கைவிட்டதே இந்த பெண்ணுக்காக தான்- மனம் திறந்த ஷாஹித் கபூர்
பிரபல இந்தி நடிகர் ஷாஹித் கபூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அப்போது புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் ஷாஹித் கபூர்
நடிகர் ஷாஹித் கபூர் இந்தி திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார் .
ஷாஹித் கபூர் 2015-ல் மீரா ராஜ்புத்தை என்பவரை மணந்தார். இவர்களுக்கு மிஷா (வயது7), ஜைன்(வயது4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அப்போது புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது..,
''நான் எப்போதும் எனது அழகான மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்தே புகைப்பிடிப்பேன். இதுவே அப்பழக்கத்தை நான் கைவிட முக்கிய காரணமாக இருந்தது.
ஒருமுறை மகளுக்கு தெரியாமல் புகைபிடிக்கும் போது எவ்வளவுநாள் இப்படியே இருப்போம். இனி வாழ்க்கையில் சிகரெட்டை தொடவே கூடாது என முடிவு செய்தேன்.
இனி மகளிடம் இருந்து மறைக்க விரும்பாததால் அந்த புகைப்பழக்கத்தை கைவிட்டு விட்டேன்'' என்று ஷாஹித் கபூர் கூறினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |