கோடிகளால் கட்டப்பட்ட பாகுபலி பிரபாஸின் வீடு: வீட்டின் மதிப்பைக் கேட்டா வாயடைத்துப் போவீங்க!
பாகுபலியில் பிரபலமான நடிகரின் பிரமாண்ட வீடு தான் தற்போது அனைவரின் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. அரண்மனைப் போல் இருக்கும் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பாகுபலி பிரபாஸ்
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு நடிகராக பிரபலமானார்.
பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு சாஹா மற்றும் ராதே ஷ்யாம் திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. அவ்விரு படங்களும் எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெறவில்லை.
தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதி புருஷ், சலார் ஆகிய படங்கள் உருவாகி திரைக்கு வரவிருக்கிறது. மேலும், சலார் திரைப்படத்தை வசூல் சாதனைப் படைத்த கே.ஜி.எப். இயக்குனர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமாண்டமான வீடு
இந்நிலையில், பிரபாஸின் பிரம்மாண்ட வீடு அனைவரால் பேசப்பட்டு வருகிறது. இந்த ஆடம்பர பண்ணை வீட்டின் மதிப்பு எவ்வளவு என்பதை கேட்டால் வாயடைத்து போயிடுவிங்க.
ஹைதெராபாத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டில், பிரம்மாண்டமான தோட்டம், நீச்சல் குளம், உள்-உடற்பயிற்சி கூடம், ஒரு விளையாட்டு பகுதி மற்றும் பல வசதிகள் கொண்ட அந்த பண்ணை வீட்டின் மதிப்பு 60 கோடிக்கும் மேல் என தெரியவந்துள்ளது.
84 ஏக்கர் பரப்பளவில் இவருக்கு ஒரு பண்ணை வீடும் இருக்கிறது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் அந்த பண்ணை வீட்டில் தான் பிரபாஸ் அதிக நேரம் செலவிடுவாராம். ஏனென்றால் அழகான வீடு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று அவர் அடிக்கடி கூறுவது உண்டு.
அந்த வீடு அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குமாம் அவருக்கு.