இதய நோயிற்கு மருந்தாகும் வில்வம் பழம் பற்றி தெரியுமா?
இந்திய வரலாறுப்படி நான்காயிரம் ஆண்டுகள் பழமையான பழமாக வில்வம் பழம் பார்க்கப்படுகின்றது.
இந்த பழம் பெரிதும் சிவனுக்கு ஏற்ற பழமாக இருக்கின்றது.
இதன் காரணமாக தான் சிவனுக்கு செய்யப்படும் பூஜையில் வில்வ இலை சேர்க்கப்படுகிறது புராணங்களின் படி வில்பம் மரத்திற்கு கீழ் சிவன் வாழ்வதாக கருதப்படுகிறது.
இவ்வளவு சிறப்புக்கள் நிறைந்த வில்பம் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
வில்வம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. குடல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வில்வ பழம் சிறந்த மருந்தாக பார்க்கப்படுகின்றது. உணவை செரிமானத்திற்குட்படுத்தி வயிறு தொடர்பான பிரச்சினைகளை சரிச் செய்கின்றது.
2. சளி பிரச்சினை இருப்பவர்கள் வில்வ பழத்தில் ஜூஸ் செய்து காலையும் மாலையும் எடுத்து கொள்ளலாம். இது மருந்தை விட வேகமாக செயற்பட்டு நோயை குணமாக்கும்.
3. சிலருக்கு திடீரென வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரும். இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் பொழுது வில்வ பழத்தோடு நாட்டு சக்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கலாம்.
4. வில்வ இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி, காது நோய்களுக்கு போட்டால் காது தொடர்பான பிரச்சினைகள் சரியாகும்.
5. சிறுநீர் கோளாறுகள் ஏற்படும் பொழுது வில்வம் சாப்பிடுவது சிறந்தது.
6. இதய நோய்களுக்கு இன்றும் மருந்தாக வில்வம் பழம் இருக்கின்றது.
7. கண்பார்வை தெளிவுபெற வில்வம் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |