தினமும் நீரில் ஊற வைத்த பாதாம் கொஞ்சம் எடுத்துக்கோங்க: அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்
உடலுக்கு அதிகமாக ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் பாதாம் இன்று பெரும்பாலான நபர்கள் ஊற வைக்காமல் அப்படியே சாப்பிடுகின்றனர்.
தண்ணீரில் ஊற வைக்காமல் சாப்பிடுவதை விட, தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது தான் அதிகமான நன்மையை அளிக்கின்றது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது .
மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது .
இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன் அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் . இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் .
ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான போலிக் அமிலம் கிடைத்து விடும் . இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று .
பாதாமின் தோலில் ஊட்டச்சத்துக்களை அறிஞ்சும் திறனைத் தடுக்கும் டேனின்கள் உள்ளது. ஆதலால் நீரில் ஊற வைத்து, தோலை எளிதில் நீக்கி சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து சத்துக்களையும் பெற முடியும்.