பளபள முகத்துக்கு பாதாம் ஃபேஸ் பெக்!
கோடைக்காலம் வந்துவிட்டாலே சருமத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் வர ஆரம்பிக்கும். அதற்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? கவலைய விடுங்க. இருக்கவே இருக்கு பாதாம்.
பாதாம் சற்று விலை அதிகமானதுதான் இருந்தாலும் இதை வைத்து ஃபேஸ் பெக் போடும்போது அது நல்லதொரு தீர்வை சருமத்துக்கு கொடுக்கும்.
பாதாமை சாப்பிடுவது உடலுக்கு எந்தளவு நன்மையைக் கொடுக்குமோ அதேயளவு அதன் தோல் சருமத்துக்கு மிகவும் நன்மையளிக்கக்கூடியது.
image - asianet newsable
முதலில் 10 பாதாம் தோலுடன் மூன்று தேக்கரண்டி பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். சருமத்தின் தன்மையை பொறுத்து அதில் தயிரும் கலந்து கொள்ளலாம். பின்னர் இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவேண்டும்.
இரு சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும். அதுமட்டுமில்லாமல் சருமத்தை சுத்தப்படுத்தும். சருமத்தில் நல்லதொரு மாற்றத்தைக் காணலாம்.
10 பாதாம் தோலுடன் 2 தேக்கரண்டி பால், சிறிதளவு மஞ்சள் தூள், ரோஸ் வோட்டர் என்பவற்றைக் கலந்து சருமத்தில் பூசவும். விரும்பினால் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். இதை அப்படியே சிறிது நேரம் விட்டுவிட்டு, உலர்ந்ததும் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதால் சருமம் இளமையாகவும் பொலிவாகவும் காணப்படும்.
இது பருக்கள் பிரச்சினையை இல்லாமல் செய்யும்.
வெயிலினால் கருமையடைந்த சருமத்தின் நிறத்தை மாற்றும்.