மாதவிடாய் காலத்தில் அரிப்பு, துர்நாற்றம் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறீர்களா? இது உங்களுக்கான டிப்ஸ்!
பொதுவாக பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை மாதவிடாய் பிரச்சினை தோன்றும்.
இதனால் பெண்கள் மாதவிடாய் காலப்பகுதியில் பெறும் அசௌகரியங்களினால் அவஸ்தை படுகின்றனர்.
அந்த வகையில் இவ்வாறான காலப்பகுதியில் மனழுத்தம் ஏற்படும் போது பல வகையான தொற்றுக்களை உடலில் தோற்றுவிக்கிறது. இது தொடர்பான விரிவான விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
மாதவிடாய் காலத்தில் ஏன் தொற்று வருகிறது?
மாதவிடாய் சுழற்சி போது ஏற்படும் மனழுத்தம் காரணமாகவும் பிறப்புறுப்பில் உள்ள யோனியில் வாழும் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களின் ஏற்றத்தாழ்வு காரணமாகவும் பெண்களுக்கு அந்தரங்க பகுதியில் அரிப்பு மற்றும் ஈஸ்ட் தொற்று எனப்படும் தொற்று நிலைமை ஏற்படலாம்.
இந்த தொற்று 3 ல் 2 பெண்களுக்கு காணப்படுகிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.
அந்த வகையில் சோப்பு, க்ரீம்கள், ஆடைகளில் உள்ள இரசாயனங்கள் போன்றவற்றின் தாக்கத்தினாலும் இந்த தொற்று நிலைமை அதிகமாகலாம்.
தொற்றின் அறிகுறிகள்
- அரிப்பு
- துர்நாற்றம்
- அந்தரங்க பகுதி ஏற்படும் வலி
- சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல்
தொற்றை கட்டுபடுத்தும் வழிமுறைகள்
- மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்பை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தொற்று ஏற்படுமாயின் இதற்கான மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.
- தோசை மற்றும் இட்லி, யோகார்ட் , ஊறுகாய், தயிர் , சீஸ் போன்ற பாக்டீரியாக்கள் நிறைந்த புரோபயாடிக்குகள் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அவை யோனி தொற்றை தடுக்க உதவுகிறது.
- இந்த தொற்றால் யோனியின் வெளிப்புறத்தில் எரிச்சலூட்டும் ஈரப்பதம் காரணமாக அந்தரங்க பகுகளில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் அதிக ஈரம், வியர்வை ஏற்படுத்தும் உள்ளாடைகளை அணியக்கூடாது.
- மாதவிடாயின் போது பயன்படுத்தப்படும் நாப்கின்களை 5 முதல் 6 மணித்தியாலத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் தொற்று பாதிப்பை குறைக்க முடியும்.
- மாதவிடாய் நாப்கின்களில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் வெப்பம் சினைப்பை பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தலாம். இதனை நறுமணம் இல்லாத நாப்கின்களை உபயோகித்து கட்டுப்படுத்தலாம்.
- குளிக்கும் போது அதிக சூடாகவோ அல்லது குளிராகவோ இல்லாமல் தினமும் வெதுவெதுப்பான நீரில் உங்கள் யோனியை சுத்தப்படுத்த வேண்டும் வெளிபுறத்தை மாத்திரம் சுத்தபடுத்த முயற்சி செய்வது சிறந்துது.