பல லட்சம் பேருக்கு பாடம் எடுத்த குட்டி தேவதைகள்... செய்த காரியத்தை நீங்களே பாருங்க
சின்னக் குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். சில நேரங்களில் வயதில் பெரியவர்கள் எடுக்கும் பாடத்தை விட சின்ன, சின்ன செய்கைகளால் குழந்தைகள் வெகுவாகவே ஈர்க்க வைத்துவிடுவார்கள். இங்கேயும் அப்படித்தான் ஒரு குழந்தை செய்யும் செயல் நமக்கு விழிப்புணர்வு தருவதோடு வயிறு குலுங்க சிரிக்கவும் வைக்கிறது.
இதுதொடர்பாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்த கொரோனா காலத்தில் ரொம்பவே சுய சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். போகும் சாலையில் எல்லாம் வழிநெடுங்கிலும் சானிட்டைசர் வைத்து அடிக்கடி கைகளக் கழுவிக் கொண்டே இருக்கிறோம்.
அது மட்டும் இல்லாமல் முகத்தில் மாஸ்க் கட்டி, நம் கலாச்சாரமே மாறியிருக்கிறது. இங்கே ஒரு குழந்தை அப்படி வழிநெடுகிலும் சானிட்டைசர் உபயோகித்து இருக்கிறது. அந்த நியாபகத்தில் அது எங்கு போனாலும் எதைப் பார்த்தாலும் அந்த குழந்தைக்கு சானிட்டைசர் மிஷினாகவே தெரிகிறது.
அந்தக்குழந்தை சாலையில் நடந்து போகும் வழியில் பார்க்கும் எலக்ட்ரிக்கல் பாக்ஸ், தெரு விளக்கு கம்பம் ஆகியவற்றையும் சானிட்டைசர் மிஷின் என நினைத்துக்கொண்டு அதை தொட்டு தன் கைகளில் தேய்த்துக் கொள்கிறது.
இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பார்க்க காமெடியாக இருந்தாலும், இந்நேரத்தில் இந்த உலகுக்கே தேவையான கருத்தாகவும் இருக்கிறது. இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்கள்.