கர்ப்பமான நாய்க்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்! வைரலாகும் காணொளி
நபரொருவர் கர்ப்பமான வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி தற்போது வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே உலகளவில் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ஒரு செல்லப் பிராணியாக நாய் காணப்படுகின்றது.

உலகில் விசுவாசம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் இருக்கிறது என்றால் இது நிச்சயம் நாயாக மட்டும் தான் இருக்க முடியும். நாய்கள் நமக்கு மிகவும் பரீட்சையமான பிராணியாக இருக்கின்றது.சிலர் நாய்களை தங்களின் குழந்தைகளுக்கு நிகராக பராமரிக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.
அந்தவகையில், கர்ப்பமாக இருக்கும் வளர்ப்பு நாய்க்கு மாலை அணிவித்து, சந்தனம் தடவி வளைகாப்பு நடத்தி நபரொருவர் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
செம க்யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த நாயின் கண்கள் பார்க்கவே அவ்வளவு அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் நேர்மறையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருவதுடன், குறித்த நபரின் நெகிழ்ச்சியான செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |