குழந்தையின் வாயில் ஓட்டை... அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெற்றோருக்கு கிடைத்த ஷாக்
குழந்தையின் வாயில் ஓட்டை இருப்பதாக நினைத்து மருத்துவமனைக்கு சென்ற பெற்றோருக்கு ஆச்சரியம் காத்திருந்துள்ளது.
இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தையின் வாயில் திடீரென ஓட்டை ஏற்பட்டதைப் போல பார்த்துள்ளார் அந்த பெண். உடனே செய்வதறியாது தன் குழந்தையின் அருகில் செல்ல முற்பட்டபோது குழந்தை மிகவும் அதிகமாக அழுதுள்ளது.
இதனையடுத்து, தன் கணவரை அழைத்து குழந்தையின் வாய்க்குள்ளே பார்க்க முற்பட்டுள்ளார். ஆனால் அருகில் சென்றதும் குழந்தை பார்க்க விடாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது.
பின்பு அவசரமாக குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளனர் தம்பதிகள். அங்கு குழந்தையினைப் பரிசோதித்து பார்த்த மருத்துவர் குழந்தையின் வாய்க்குள் ஓட்டை எதுவும் ஏற்படவில்லை எனவும் அது வெறும் ஸ்டிக்கர் எனவும் தெரிவித்துள்ளனர்.
மருத்துவரின் கூறிய தகவலால் பெருமூச்சு அடைந்த குறித்த தம்பதி, குழந்தையுடன் நிம்மதியாக வீடு திரும்பியுள்ளதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் சிரித்துள்ளனர்.