லைவ் வானிலை நிகழ்ச்சி போகும் போதே அம்மாவை தேடிவந்த குழந்தை.. இணையத்தில் வைரல்!
அமெரிக்க நாட்டில் பிரபல தொலைக்காட்சி ஏபிசி7 செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் லெஸ்லி லோபஸ். இவர், தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்.
தினசரி இரவு வேளையில் மாநில வானிலை அறிக்கையை தொகுப்பித்து வழங்குவது இவரது பணியாகும். இந்நிலையில், இரவு நேரடி ஒளிபரப்பின் போது, வானிலை முன்னறிவிப்பு நடைபெற்றது.
இதன்போது, வானிலை அறிக்கை செய்தியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது, அவரது பத்து மாத குழந்தை தவழ்ந்தபடியே தாயை தேடி வந்து காலினை பிடித்து எழுந்து நிற்க முயற்சித்தான்.
இந்த சூழ்நிலையை சமாளித்தபடியே, லெஸ்ஸி தனது மகனை இடுப்பில் தூக்கி வைத்தபடியே வானிலை அறிக்கையை நிறைவு செய்தார். மேலும், தனது மகன் தன்னை தேடி வந்துவிட்டதாகவும் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
Baby on the move! There is no stopping adorable Nolan now that he can walk during Mommy’s (@abc7leslielopez) forecast. #Love #goodmorning #ThursdayThoughts #Babies #TheBest @ABC7 pic.twitter.com/jvUcaSMyGi
— Brandi Hitt (@ABC7Brandi) January 28, 2021