நடு வானில் பறக்கும் விமானத்தில் பிறந்த ஆண் குழந்தை... யாருக்கும் தெரியாமல் டாய்லெட்டில் பார்சல் செய்து வீசிய பெண்!
முதலாம் திகதி அன்று விமானத்திலுள்ள டாய்லெட்டில் பார்சல் சுற்றப்பட்ட நிலையில் அப்பொழுது பிறந்த ஆண் குழந்தை வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஏர் மோரீசியஸ் ஏர்பஸ் ஏ 330-900 என்ற விமானத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் குழந்தையை எடுத்துக்கொண்டு இந்த குழந்தைக்கான தாயை விசாரித்தனர்.

ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது மடகாஸ்கர் நாட்டைச்சேர்ந்த ஒரு பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து அவரை விசாரித்த போது அவர் மறுத்துள்ளார்.
ஆனால் அதிகாரிகள் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று சோதனை செய்த போது அவர் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்தற்கான ஆதாரங்கள் அவரது உடலில் இருந்துள்ளது.
இதையடுத்து குழந்தையை பெற்று விமானத்தின் டாய்லெட்டில், பேப்பரை சுற்றி வீசி சென்றதால் அவரை கைது செய்தனர். தற்போது அவரிடம் இந்த குழந்தை குறித்து விசாரணை செய்து வருகின்னறர். இந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.