Viral Video: Chef-ஆக மாறிய சிறுவனின் அசத்தல் சாண்ட்வீச்! நாவில் எச்சில் ஊற வைக்கும் காட்சி
சிறுவன் ஒருவன் மிக அழகாக சாண்ட்வீச் செய்து சாப்பிடும் காணொளி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
Chef-ஆக மாறிய சிறுவன்
இன்றைய காலத்தில் சிறிய விடயம் என்றாலும் அவை சமூகவலைத்தளங்கள் மூலம் உடனே மக்களிடையே சென்று விடுகின்றது. அதிலும் குழந்தைகளின் அட்டகாசம் என்றால் ஏகப்பட்ட பார்வையாளர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
அந்த வகையில் சிறுவன் ஒருவன் தனக்குத்தானே சாண்ட்விச் செய்து சாப்பிடும் க்யூட்டான வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குறித்த காணொளியில் விறகு அடுப்பின் எரியும் நெருப்பின் மேல் மிகப்பெரிய தோசைக்கல் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவன் அருகில் அமர்ந்து சமையல் கலைஞர் போன்று உடையணிந்து கொண்டு, ரொட்டியை ஸ்டைலாக அதில் போட்டு புரட்டி எடுக்கின்றான்.
மற்றொரு புறம் முட்டை ஒன்றினை உடைத்து ரொட்டி அருகிலேயே உடைத்து ஊற்றி மேலே கெச்சப்பை ஊற்றி, புரட்டி போட்ட ரொட்டியை இரண்டாக பிரித்து அதனுள் தான் போட்ட ஆஃப் பாயிலை வைத்து, இறுதியில் சாப்பிடத் தொடங்கியுள்ளான்.
குறித்த சிறுவனைப் பற்றிய தகவல் எதுவும் வெளிவராத நிலையில், The Figen எனும் ட்விட்டர் பக்கத்தில் நபர் பகிர்ந்துள்ள இந்த காட்சி லட்சக்கணக்கானோரை மெய்மறக்கச் செய்துள்ளது.
நெட்டிசன்களுக்கு மத்தியில் இந்த வீடியோ வைரலாக பரவ," க்யூட் chef" என்றும் "சமையல் கலைஞரின் உடை அருமையாக உள்ளது" எனவும் "சாண்ட்விச் செய்யும் குட்டி மாஸ்டர்" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Sweet baby chef. ?
— The Figen (@TheFigen_) February 22, 2023
pic.twitter.com/eNoQ6B413O