தெய்வத்திருமகள் குழந்தை சாராவா இது? வாயடைக்க வைக்கும் தற்போதைய புகைப்படம்
தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய சாராவின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சாரா அர்ஜுன்
குழந்தை நட்சத்திரத்தில் அறிமுகமாகி தற்போது நடிகையாக வலம் வரும் சாரா அர்ஜுன் மும்பையைச் சேர்ந்தவர்.

இவர் 404 என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில், தமிழில் தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமிற்கு மகளாக நடித்து அசத்தினார்.

அதன் பின்பு அடுத்தடுத்து தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து அசத்தினார். சிறுமியாக கலக்கிய இவர் பொன்னியின் செல்வன் படத்தில் இளம்வயது பெண்ணாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இப்படத்தில் விக்ரமின் சிறுவயது காதலியாக நடித்திருந்த நிலையில், சின்னஞ்சிறு கிளியே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் 40 வயது நடிகரான ரன்வீர் சிங்குடன் துரந்தர் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தன்னை விட 20 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளது பெரும் பேச்சுபொருளாக மாறியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |