தவறான தொடுகை குறித்து கற்பிக்கும் பெற்றோர்! சமார்த்தியமாக ரியாக்ஷன் கொடுக்கும் குழந்தை
பெண் குழந்தைக்கு தவறாக முறையில் தொடுவது குறித்து சரியாக கற்பிக்கும் பெற்றோரின் வீடியோக்காட்சி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
சமார்த்தியமாக நடந்து கொள்ளும் குழந்தை
பொதுவாக பெண் குழந்தைக்கு தற்போது சிறுவயதிலேயே துஷ்பிரயோகங்கள் நடந்து கொண்டு வருகிறது.
இதனால் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவர்களுக்கு சில நல்ல நடத்தைகள் குறித்து சிறு வயதிலேயே கற்பிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.
அந்த வகையில் சுமார் 3 வயது பெண் குழந்தைக்கு நல்ல விதமாக தொடுவது மற்று தவறான முறையில் தொடுவது குறித்து அவருடைய அம்மா சொல்லி கொடுக்கிறார்.
மேலும் அவர் கை வைக்கும் போது குறித்த குழந்தை முகபாவனையுடன் அதனை நிராகரிக்கிறது.
இது போன்ற காட்சிகள் சமூகத்திற்கு தேவையானவை என்பதால் இந்த வீடியோக்காட்சி மில்லிக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், குறித்த பெற்றோருக்கு நெட்டிசன்கள், பாராட்டுக்கள் தெரிவித்தும் வருகிறார்கள்.