தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தைக்கு முளைக்கும் பற்கள்... உங்களுக்கு தெரியுமா?
பொதுவாக குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு ஒரு வயதாகும் போது தான் பற்கள் வளரும் என்று நினைத்திருக்கும் நமக்கு இந்த பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருவிலேயே வளரும் பற்கள்
குழந்தை பிறந்த பின்பு 6 மாதங்கள் கடந்து தான் பால் பற்கள் வளருகின்றது என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் குழந்தை தாயின் கருவில் இருக்கும் போதே அதற்கு பால் பற்கள் முளைக்க தோன்றிவிடுமாம்.
ஆம் குழந்தைகள் தாயின் வயிற்றில் ஆறாவது வாரம் இருக்கும் பொழுதே பற்கள் தோன்றிவிடும் என்று பதினான்காவது வாரம் முடியும் போது முழுமையாக பற்கள் உள்ளே தோன்றிவிடுமாம்.
பிறந்த பின்பு பால் பற்கள் வெளியே வரும் முன்பு குழந்தைகள் எரிச்சல் அடைவதுடன், தனது விரலால் ஈறுகளை தேய்ப்பார்கள். மேலும் குழந்தைகளுக்கு லேசான காய்ச்சலும் ஏற்படும்.
இந்த அறிகுறிகளை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க போகின்றது என்பதை தெரிந்து கொள்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |