உலக அழிவு இப்படி தான் நிகழும்... பீதியை கிளப்பும் பாவா வங்காவின் கணிப்பு
தீர்க்கத்தரிசி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பாபா வங்கா தான். இவரின் கணிப்புகளில் இதுவரையில் கிட்டதட்ட 85 சதவீதம் மேல் பழித்துள்ளது.
இந்நிலையில், உலக அழிவு குறித்து பாபா வங்கா கணித்துள்ள விடயங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

பாபா வங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
கண் பார்வையை இழந்த பின்னரே பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் அபரிமிதமான ஆற்றல் கிடைத்தாக குறிப்பிடப்படுகின்றது.

பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார்.
பாபா வங்காக உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது. இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலக அழிவு எப்போது?

மனிதகுலம் தனது இறுதி அழிவை நோக்கிய பயணத்தை பூமிக்கு அப்பால் உள்ள விண்வெளியிலேயே ஆரம்பிக்கும் என பாபா வாங்காவின் கணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாபா வங்காவின் கணிப்புகளின்படி, முதலில் வளங்களில் ஏற்படும் பற்றாக்குறையால் போர்கள் உருவாகும் எனவும் அதில், மனிதகுலத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் அழிவார்கள் எனவும் கணித்துள்ளார்.
மனிதர்களுக்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்கும் இடையில் ஏற்படும் தொடர்பால் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் தங்களில் இருப்பை நிலைநிறுத்தும் அளவுக்கு வளர்ச்சியடைவார்கள் எனவும், 3005-ஆம் ஆண்டிற்குள் இது நிச்சயம் நிகழும் எனவும் அவர் கணித்துள்ளார்.

மனிதர்களின் செவ்வாய் கிரகத்தில் குடியேறிய பின்னர், செவ்வாய் கிரகத்தில் ஒரு மிகப்பெரும் போர் மூளும் என்றும், இது கிரகங்களின் சுற்றுப்பாதைகளையே மாற்றியமைக்கும் அளவிற்குத் மிகவும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.
5076 மற்றும் 5078-க்கு இடையில், ஆய்வாளர்கள் பிரபஞ்சத்தின் எல்லையை வரையறுப்பார்கள் எனவும், இந்த கண்டுபிடிப்பு மனிதகுலத்தைப் பிளவுபடுத்தும் எனவும் கணித்துள்ள பாபா வங்கா கடைசியில், 5079 ஆம் ஆண்டுக்குள் மனித நாகரிகத்தின் அழிவும், ஒருவேளை பிரபஞ்சத்தின் அழிவும் நிகழும் என கணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |