2024ல் உலகில் நடக்கவிருப்பது என்ன? பாபா வங்காவின் பகீர் கணிப்பு
பிறந்திருக்கும் 2024 புதிய ஆண்டில் பாபா வங்கா கூறிய சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த பாபா வங்கா?
பல்கேரிய நாஸ்டர்டாமஸ் பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி மரணம் அடைந்தார்.
அவர் இறப்பதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கு பின்பு என்ன நடக்கும் என்ற கணிப்புகளை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார். இவருக்கு 13 வயதில் பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறிபோனது.
அப்பொழுது இருந்து இவருக்கு எதிர்காலத்தில் சம்பவிக்கும் காட்சிகள் தெரியவந்துள்ளது. தினமும் தனக்கு வரும் காட்சிகளை கணிப்புகளாக எழுதி வைத்துள்ள இவர் கடவுள் தனக்கு கொடுத்த சக்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
5079ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார். இவர் கணிப்பில் கூறியது 85 சதவீதம் அப்படியே நடந்துள்ளது.
குறிப்பாக பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அணு உலை விபத்து, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர் என அரங்கேறி வருகின்றது.
கடந்த ஆண்டும் வளர்ந்த நாடு அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டது, ரஷ்ய உக்ரைன் போர், பிரிட்டன் ராணியின் மரணம் என்று அடுத்தடுத்து நடந்தது.
பாக்கியாவிற்கு கிடைத்த அடுத்த அதிர்ஷ்டம்! புள்ளப்பூச்சி மாதிரி இருந்தாளே! குடிபோதையில் புலம்பும் கோபி
2024ம் ஆண்டு கணிப்பு என்ன?
2024ம் ஆண்டில் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் உயரும் என்றும், இதனால் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் தாக்குவதால் பயிர்கள் சேதமடைந்து பஞ்சத்தில் மக்கள் இருப்பார்கள்.
சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷ்ய தலைவர், கொலை செய்யப்படுவார். இவர் புடின் மரணத்தை குறித்து இவ்வாறு கூறியுள்ளாராம்.
உயிரியல் ஆயுதத் தாக்குதல்கள் உருவாகும் என்றும் ஐரோப்பாவில் பயங்கரவாதத் தாக்குதலும் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
2024 இல் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள உள்ளதாகவும், புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்துமாம்.
புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் இருக்கும். உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய போர் ஒன்று நடக்கும். இதே வருடம் நாம் ஏலியன்களை காண்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர் கூறியதில் அடுத்தடுத்து நிலநடுக்கம் தற்போது ஜப்பானில் நடைபெற்றுள்ளது. மற்றொரு விடயம் ஏலியன் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் உள்ள மால் ஒன்றில் ஏலியன் இறங்கியதாகவும் புகார் எழுந்த நிலையில், இது உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |