ஹன்டா வைரஸின் தாக்கம்.. முன்னரே கணித்த பாபா வங்கா! இனி வரப்போகும் பேரழிவு என்ன?
2026-ல் நடக்கப்போகும் பல பேரழிவுகள் பற்றி பாப வங்கா கணித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஹான்டா வைரஸ் பற்றியும் அவரது கணிப்புக்களில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாபா வங்கா
உலகில் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் போதெல்லாம், பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்பு தான் நமக்கு நினைவிற்கு வரும். அவர் இறப்பதற்கு முன்பும் இன்றும் அவருடைய பல கணிப்புக்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.
உலகப்போர் தாக்குதல்களாக இருந்தாலும் சரி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக இருந்தாலும் சரி, அவர் அனைத்தையும் முன்னரே கணித்திருந்தார்.
இப்போது, 2026-ல் அதிகரித்து வரும் நோரோவைரஸ் மற்றும் ஹன்டா வைரஸ் பாதிப்புகள், பாபா வங்காவின் முன்கூட்டிய கணிப்புக்கள் எனப்படுகின்றது.
அந்த வகையில் இதை விரிவாக பார்க்க பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம்.

முன்கூட்டியே அறிந்த பாபா வங்கா
2025 மற்றும் 2027-க்கு இடையில் மிகவும் கொந்தளிப்பான ஒரு காலகட்டம் நிலவும் என்று பாபா வங்கா கணித்ததாக அவருடைய சிஷ்யர்கள் கூறினார்கள்.
அவரது கூற்றுப்படி, மனிதகுலம் "முற்றிலும் அறியப்படாத" மருத்துவ நிலைமைகளை எதிர்கொள்ளும். வேகமாகப் பரவக்கூடிய மற்றும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத வைரஸ்கள் பரவும் என குறிப்பிட்டுள்ளாராம்.
தற்போது மக்கள், சமீபத்திய ஹன்டா வைரஸ் மற்றும் நோரோ வைரஸ் தாக்கத்தால் உள்ளாகி வருகின்றனர்.

பாபா வங்கா தனது எந்தவொரு கணிப்புகளிலும் 'ஹன்டா வைரஸ்' அல்லது 'நோரோ வைரஸ்' என்று வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் வைரல் பற்றி கணித்துள்ளார்.
அவருடைய கணிப்புகளில் பெரும்பாலானவை பொதுவானவை.
அறிவியல் ரீதியாக, இந்த வைரஸ்களுக்கு பாபா வங்காவுடன் நேரடித் தொடர்பு இல்லை, ஆனால் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணிப்புகள் உண்மையாகின்றனவோ இல்லையோ, நாம் நமது உடல்நலம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். நோரோவைரஸ் மற்றும் ஹன்டா வைரஸ் ஆகிய இரண்டுமே ஆபத்தானவை.
நல்ல சுகாதாரத்தைப் பேணுதல், கைகளைக் கழுவுதல், மற்றும் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுதல் ஆகியவை சிறந்த நடவடிக்கைகளாகும்.
பயப்படுவதை விட விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் நமது எதிர்காலம் இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |