மியான்மரில் பூகம்பம்- பாபா வாங்கா கணிப்பில் அடுத்து நடக்கப்போவது என்ன? உலகின் முழு ஜாதகம்
பொதுவாக ஒரு வருடம் பிறந்து விட்டாலே அந்த ஆண்டு பற்றிய கணிப்புக்கள் ஏராளமாக பரவ ஆரம்பித்து விடும். அப்படியொரு கணிப்பாளர் தான் பாபா வாங்கா.
உலகில் எதிர்காலத்தைக் கணிக்கும் பல தீர்க்கதரசிகள் உள்ளனர். அதில் பாபா வாங்காவும் ஒருவராக இருக்கிறார்.
பாபா வாங்காவின் கணிப்புக்களை தெரிந்து கொள்ள இணையவாசிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனெனின் அவர்களின் கணிப்பில் ஒரு சில விடயங்கள் உண்மையாகவே நடந்தது.
உதாரணமாக, ரஷ்யா-உக்ரைன் போர் முதல் செர்னோபில் பேரழிவு வரை இவரது கணிப்புகள் உண்மையாகியுள்ளன.
பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கத்தரசியான பாபா வாங்காவின் உண்மையான பெயர் “வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா” என்பதாகும்.
இவருக்கு 12 வயதாக இருக்கும் போது ஒரு விபத்தில் அவரின் பார்வை பறிபோனது. ஆனால் அந்த சம்பவத்திற்கு பின் ஒரு அற்புதமான சக்தியான எதிர்காலத்தை கணிக்கும் திறன் கிடைத்தது.
மியன்மார் நிலநடுக்கத்தை கணித்தாரா?
ஒட்டுமொத்த உலகத்துக்கே ஜாதகம் எழுதிவைத்துவிட்டுச் சென்ற பாபா வாங்கா, தற்போது நடந்த இந்த நிலநடுக்கத்தையும் கணித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவரது தீர்க்க தரிசனப்படி, அடுத்த 3000 ஆண்டுகளில் இந்த பூமியை என்ன செய்யக் காத்திருக்கிறது இயற்கை என்ற விவரங்கள் ஆண்டு வாரியாக உள்ளது.
இவரின் கணிப்பின் படி, இளவரசி டயானா மரணம், இந்தியப் பெருங்கடல் சுனாமி, கருப்பினத்தவரான ஒபாமா அமெரிக்காவின் 44-வது அதிபராவது என அவர் கணித்ததெல்லாம் நடந்தது தெரியும். தனது இறப்புத் தேதி ஆகஸ்ட் 11, 1996-ல் நடக்கும் உள்ளிட்ட பல கணிப்பு நடந்துள்ளன.
இது போன்று வேறு என்னென்ன கணிப்புக்கள் உள்ளன. அவையெல்லாம் எந்தெந்த ஆண்டுகள் நடக்கும் என்பதனை பதிவில் காணலாம்.
ஆண்டு கணிப்பு
- 2025 ஐரோப்பாவில் போர். கிழக்கிடம் மேற்கு தோற்று EU வாழ அரிதானதாகும்
- 2028 புது மின்சக்தி கண்டுபிடிக்கப்படும், பசி ஒழியும், வீனஸ் செல்வான் மனிதன்
- 2043 ஐரோப்பியாவில் இஸ்லாமியப் பெரும்பான்மை ஏற்படும்
- 2046 மனித மாற்று உறுப்புக்கள் ஆய்வகங்களில் சிந்தட்டிக்கில் உருவாகும்
- 2066 சுற்றுச்சூழலை மறுகட்டமைக்கும் ஆயுதத்தை US உருவாக்கும்
- 2076 சமூகத்தில் சாதி முறை ஒழியும்
- 2086 இயற்கை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்
- 2088 மனிதர்களுக்கு விரைவில் முதுமையாகும் வைரஸ் தாக்கும்
- 2097 முதுமையாக்கும் வைரஸ் ஒழிக்கப்படும்
- 2100 ஓர் செயற்கைச் சூரியன் உலகின் இருள் பகுதியை சூடாக்கும்
- 2111 மனிதர்களிடையே ரோபோக்கள் அதிகரிக்கும்
- 2125 பாபா வாங்கா ஹங்கேரியில் மறு ஜென்மம் எடுப்பார்
- 2154 விலங்குகள் மனிதர்களைப் போல் மாறும்
- 2167 புதிய மதம் உலகில் பிரபலமாகும்
- 2170 பூமி வறண்ட பாலைவனமாகும்
- 2183 செவ்வாய் கிரகத்தில் காலனி அமைத்து தலைமைக்காக போராட்டம் நடக்கும்
- 2187 எரிமலைகள் முற்றிலுமாக செயலிழக்கப்படும்
- 2201 சூரியன் குளிரும், பருவநிலை பெரும் மாற்றமடையும்
- 2221 வேற்றுகிரக வாசிகளின் உண்மை முகம் மனிதர்களை மிரட்டும்
- 2256 பூமிக்குத் திரும்பிவரும் ராக்கெட்டால் புது வைரஸ் பரவும்
- 2262 செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதும் அபாயம்
- 2288 டைம் டிராவல் சாத்தியமாகி வேற்றுகிரகவாசிகளோடு மனிதன் பேசுவான்
- 2291 சூரியன் மேலும் குளிர்வடையும், அதை சூடாக்க மனிதன் முயல்வான்
- 2296 சூரிய ஒளி, புவி ஈர்ப்பால் சேட்டிலைட்கள் தரையில் மோதும்
- 2304 நிலவை இன்னும் தீவிரமாக ஆய்வு செய்வான் மனிதன்
- 2341 விண்வெளிக்கு அப்பாற்பட்ட சக்தியால் பூமிக்கு ஆபத்து
- 2354 தண்ணீர் பஞ்சம் அதிகரிக்கும்
- 2371 உலகளவில் பஞ்சம், பட்டினி ஏற்படும்
- 2378 புதிய மனித இனம் உருவாகும்
- 2480 இரு செயற்கைச் சூரியன்கள் மோதி உலகம் இருளும்
- 3005 செவ்வாய் கிரகத்தில் போர் நடக்கும்
- 3010 நிலவில் விண்கல் மோதி புழுதி மேகமாகப் படியும்
- 3797 ஜீவராசிகள் மடியும், சூரியக் குடும்பத்தில் புது கோள் உருவாக்கப்படும்
- 3854 நாகரீக வளர்ச்சியின்றி, மீண்டும் பழங்குடியாவான் மனிதன்
- 4308 மூளையில் மரபணு மாறுபாட்டால் சுயநலமாவான் மனிதன்
- 4509 கடவுளோடு தொடர்பு ஏற்படும்
- 4599 இறப்பின்மை அதிகரித்து, பூமி மனிதர்களால் நிறையும்
- 5076 பிரபஞ்சத்தின் எல்லை கண்டறியப்படும்
- 5078 பிரபஞ்சத்தை விட்டு வெளியேற மனிதன் முயல்வான், 40% பேர் மறுப்பர்
- 5079 உலகம் அழியும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
