அடிக்கடி குத்தாட்டம் போட்டு விமர்சகர்களிடம் சிக்கிக் கொள்ளும் பாக்கியலட்சுமி: அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகியாக கலக்கி வரும் பாக்கியா வெறியாட்டம் போட்ட வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலின் வளர்ச்சி
தமிழர்கள் வாழும் பகுதியில் பாக்கியலட்சுமி சீரியல் பற்றி கேட்டால் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்தளவு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடை போடுகிறது.
இந்த சீரியல் ஆரம்பத்தில் வழக்கமான கதையாக தான் இருந்தது காலங்கள் செல்ல செல்ல மக்களுக்கு பிடித்தமான ஷாட்களை வைத்து வீட்டு பெண்களை கவர்ந்து விட்டார் பாக்கியலட்சுமி சீரியலின் இயக்குநர்.
மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் கோபி, பாக்கியா, எழில், ராதிகா உள்ளிட்டோர் கதாபாத்திரங்கள் கலக்கி வருகிறது. இதனால் டிஆர்பி ரேங்கில் முதலில் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த கதையில் வரும் பாக்கியா, கன்னடத்தில் “மாங்கல்யா” என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இயக்குனர் “ஏ எல் விஜய்” இயக்கிய சைவம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இவ்வாறு பிரபலமான பாக்கியா தற்போது பாக்கியலட்சுமி என்ற சீரியலில் கதாநாயகியாக கலக்கி வருகிறார். இவரின் அமைதியான கதாபாத்திரம் இவரின் முகத்திற்கு சரியாக பொருந்துகிறது.
நெட்டிசன்கள் மனதை தொட்ட வீடியோ காட்சி
இந்நிலையில் பாக்கியா என்கிற சுஜித்ரா பாக்கியலட்சுமி சீரியலுக்கு அப்படியே புறம்பாக தான் இருப்பவர். இந்த விடயம் இவர் தொலைக்காட்சியில் கலந்து கொள்ளும் போது தான் தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் பாக்கியா அவ்வப்போது அவர் பங்கேற்கும் வீடியோக்கள் பகிர்வது வழக்கம்.
இதன்படி, பாக்கியா சமீபத்தில் நடனமாடிய வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பாக்கியாவின் வெறியாட்டம் என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.