பாக்கியா பக்கம் நிற்கும் ராதிகா.. பொறாமையில் வெடித்த மாமியார் - ஷாக்கில் கோபி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருகிறது.
பாக்கியா பக்கம் நிற்கும் ராதிகா
கடந்த வாரங்களில் சுவாரஸ்யமாக எந்தவொரு விடயமும் கதையில் இல்லாததால் பாக்கியலட்சுமியின் டிஆர்பி குறைந்து வந்துள்ளது.
ஆகவே இவ்வாரம் பாக்கியலட்சுமி ஒரு பொருட்காட்சி காண்ட்ராக்ட் எடுக்க முயற்சித்து அது நடக்காததால் ஏற்படும் பிரச்சினைகள் வைத்து ஆரம்பித்து உள்ளனர்.
அந்த காண்ட்ராக்ட் எடுக்க முயற்சித்து செய்த போது 1.5 லட்சம் பணத்தை இழந்துவிட்டு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் பழனிசாமியின் உதவியால் மீண்டும் காண்ட்ராக்ட் பெற்றுள்ளார். ஆனாலும் கோபி மற்றும் அவரது அம்மா இருவரும் சேர்ந்து பாக்யாவை கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இதைக்கேட்டு கோபமடைந்த ராதிகா, கோபியை திட்டியுள்ளார். பாக்யாவை ஊக்குவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஏன் இப்படி பேசுறீங்க என கேட்டுள்ளார்.
இதையடுத்து கோபியின் அப்பா, 'இவ்வளவு புத்திசாலியாக இருக்கும் நீ இவனை எப்படி கல்யாணம் பண்ண' என கிண்டலடித்துக் கேட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |