பாக்கியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து லீக்கான புகைப்படம்
பாக்யலக்ஷ்மி சீரியல் நடிகை சுசித்ராக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.
இந்த சீரியல் மூலம் பாக்கியாவிற்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் சேர்ந்து உள்ளது.
மேலும், சீரியல் உச்ச கட்ட பரபரப்பில் எட்டி வருகிறது. அதிலும்கடந்த சில வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

சுசித்ரா நடிக்கும் படம்
இந்தநிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு பட வாய்ப்பு கிடைத்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது, சீரியலில் பாக்கியாவாக நடித்துவரும் சுசித்ராவுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தற்போது இவர் பிரபுதேவாவுக்கு அம்மாவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த படம் தமிழ், கன்னட மொழியில் உருவாகிறது. படத்தின் போது சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

