ராமமூர்த்தி தாத்தா இறந்துட்டாரு.. இனி கதை இப்படி தான் இருக்கும்- மயூ ஓபன் டாக்
பாக்கியலட்சுமியில் ராமமூர்த்தி இறந்த பின்னர் கதைக்களம் இப்படி தான் நகரும் என மயூ பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. அதே சமயம் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், இந்த வாரம் ராமமூர்த்தி இறந்து விட்டார் என்பது போல் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து ராமமூர்த்தியின் இறுதி சடங்கை பாக்கியா தான் செய்வார் என்று ஈஸ்வரி சண்டை போடுகிறார். இதனால் ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் அனைத்தையும் பாக்கியா செய்கிறார்.
சீரியலில் வரும் காட்சிகள் அனைத்தும் தத்துரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக நொடிக்கு ஒரு முறை ராமமூர்த்தியின் முகத்திற்கு குளோசப் வைக்கிறார்கள். இந்த சம்பவம் ரசிகர்களை மேலும் கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இனி இது தான் கதை..
Siragadikka Aasai: மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தாய்... பொய் சொல்லி மனோஜிடம் மாட்டிக்கொண்ட ரோகினி
இந்த நிலையில் சீரியலில் ராதிகாவின் மகளாக நடிக்கும் மயூ கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில், “ ராமமூர்த்தி தாத்தா இறந்த பின்னர் அப்படியே நிஜத்தில் ஒருவர் இறந்துவிட்டால் எப்படி இருக்குமோ அதுபோலவே அங்கு எல்லா சடங்குகளும் செய்தார்கள். கடைசியில் நடைபெறும் சடங்குக்கு மட்டும் வேண்டாம் என்னை வர வேண்டாம் என்றார்கள்.
வீட்டில் வைத்து நடக்கும் எல்லா சடங்குகளுக்கும் நானும் அங்கே தான் இருந்தேன். எனக்கு அதை பார்க்கும் போதே ரொம்ப கஷ்டமாக இருந்தது.
இதனை தொடர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் இனி வேறு விதமாக இருக்கும் என மயூ பேசியிருக்கிறார்.
இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் இனி கதைக்களம் எப்படி இருக்கும் என்பதனை காண ஆவலுடன் இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |