ஜெனி, குழந்தைக்காக மாலினியின் உறவை முறிக்க போராடும் செழியன்! பாக்கியாவின் முடிவு என்ன?
ஜெனி, குழந்தைக்காக மாலினியின் உறவை முறிக்க செழியன் போராடி வருகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்து கொள்கின்றது.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
செழியனின் அதிரடி முடிவு
இந்த நிலையில், செழியனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பாக்கியாவிற்கு செழியன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனை சரிச் செய்ய ஜெனியை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என திட்டம் போட்டுள்ளார்.
இதற்காக ஜெனியின் அம்மாவிடமும் பேசி ஒப்புக் கொள்ள வைக்கிறார், மாலினியின் தொல்லை அதிகரித்து வருகின்றது.
செழியன் மாட்டிக் கொள்ளக் கூடாது என நினைத்து மாலினியின் உறவை எப்படியாவது முறித்து விட வேண்டும் என வயிற்றில் நெருப்பை கொட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகின்றார்.
இது ஒரு புறம் இருக்கையில், அமிர்தாவின் கணவர் கணேஷ் அமிர்தாவை கண்டுபிடித்து பாக்கியாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
எழிலின் வாழ்க்கை என்ன ஆவது என விறுவிறுப்பாக இனி வரும் எபிசோட்களை பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |