பாக்கிலட்சுமி சீரியல் செழியனுடன் ஒன்று சேர்ந்த மாலினி.. அவரே போட்ட பதிவு
பாக்கியலட்சுமி சீரியலில் மாலினி கதாபாத்திரத்தில் நடித்த ரீமா அசோக் போட்ட பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி நிறைவுக்கு வந்த சீரியல் தான் பாக்கிலட்சுமி.
கணவர் இல்லாமல் சமூகத்தில் உள்ள பெண்கள் படும் அவஸ்தையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சீரியலில் பாக்கியா முக்கிய கதாபாத்திரமாக இருந்தது.
1000 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பாகிய இந்த சீரியல் பல பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.
சீரியலில் எவ்வளவு கதாபாத்திரம் வந்தாலும் பாக்கியா - கோபிக்கு இணையாக யாரையும் ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை.
ஒருவழியாக ஒன்று சேர்ந்த குடும்பம்
இந்த நிலையில், சீரியலில் செழியனை காதலிக்கும் பெண்ணாக அறிமுகமாகி, குடும்பத்தையே இரண்டாக்கியவர் தான் மாலினி கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடிகை ரீமா அசோக் நடித்திருப்பார். தன்னுடைய வில்லனத்தை கண்ணால் காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதாவது, திருமணமான செழியன் வாழ்க்கையில் நண்பியாக அறிமுகமாகி, அதன் பின்னர் காதலியாக மாறினார். செழியனை பிடித்து போக எப்படியாவது மனைவியாக மாறிவிடலாம் என திட்டம் போட்டு, வீட்டில் வந்து ஜெனியிடம் அனைத்தையும் கூறி விட்டார்.
இதனால் செழியன் பல அசிங்கப்பட்டு, ஜெனியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். மாலினியின் வருகை கதைக்களத்தை இன்னும் சுவாரஷ்யப்படுத்தியிருந்தது.
இப்படி சீரியல் பல டுவிஸ்ட்டுகளை கொடுத்த மாலினி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரீமா அசோக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செழியன், பாக்கியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “ஒரு மாதிரி சேர்ந்துட்டீங்க..” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |




