பெண் தோழியுடன் ஊர் சுற்றும் ரவி மோகன்- தற்போது எங்கே போயிருக்கிறார் பாருங்க
நடிகர் ரவி மோகன், பெண் தோழியான கெனிஷாவுடன் அடிக்கடி சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்கள் இணையவாசிகள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானாவர் தான் நடிகர் ரவி மோகன்.
இந்த திரைப்பட வெற்றிக்கு பின்னர், ரவி தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என மாற்றிக் கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ரவி மோகன் என்று பெயர் மாற்றம் செய்திருந்தார்.
கடந்த வருடம் அவருடைய குடும்ப பிரச்சினைகள் ஊடகங்களுக்கு வர ஆரம்பித்தது.
அதாவது காதலித்து திருமணம் செய்த ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாகவும், குடும்பத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடப்பதாகவும் அறிக்கையொன்றை பகிர்ந்தார். அன்று முதல் இன்று வரை சமூக வலைத்தளங்களில் ரவிமோகன் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
எங்கே போயிருக்காங்க தெரியுமா?
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவிமோகன் கெனிஷாவுடன் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகியன.
அதன் பின்னர், இலங்கைக்கு ஜோடியாக சென்று கெனிஷாவின் பாடலுக்கு ப்ரமோஷன் செய்தார்கள். இப்படி அடிக்கடி டூர் சென்றுக்கொண்டிருக்கும் ரவிமோகன்- கெனிஷா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சர்ச்சை முடிந்து விட்டது என நெட்டிசன்கள் பேசினாலும், ரவிமோகன்- கெனிஷா இருவரும் ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |