பாக்கியாவை சிங்கள் ஆளாக்குவேன்.. வன்மத்தை கக்க காத்திருக்கும் கோபி - விறுவிறுப்பாக நகரும் கதைக்களம்!
“பாக்கியாவை சிங்கள் ஆளாக தவிக்க விடுவேன்” என பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
கணவர் இன்னொரு பெண்ணுடன் சென்றதை தாக்கிக் கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்காக வாழும் பெண்ணாக தான் பாக்கியா இருந்து வருகின்றார்.
என்ன பிரச்சினை வந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களை மாத்திரம் யோசிக்கும் பாக்கியாவை குடும்பத்திலுள்ள அனைவரும் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
இதனை பொருத்து கொள்ளாத கோபி, ராதிகாவுடன் இணைந்து எப்படியாவது பாக்கியாவை முடக்கியாக வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகின்றார்.
வன்மத்தை கக்க நேரம் பார்க்கும் கோபி
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் மகள் இனியாவுடன் சேர்ந்து பாக்கியா கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்.
இனியாவிற்கு பாக்கியா கல்லூரிக்கு வருவது பிடிக்கவில்லை. இதனால் கல்லூரியில் இனியாவால் சந்தோசமாக இருக்க முடியவில்லை.
இதனை கோபியிடம் இனியா கூற, கோபி தன்னுடைய அம்மாவை அழைத்து பாக்கியா பற்றி பேசியுள்ளார்.
கோபியின் முகத்தை உடைக்கும் வகையில் பதில் கொடுத்த ஈஸ்வரி வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து பாக்கியாவை எப்படியாவது பலி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகின்றார். வன்மத்தை எப்போது தான் கோபி கக்குவார் என ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |