பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் மருமகளுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பிய கோபி...
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் ரித்திகாவிற்கு வாழ்த்து சொல்லி புகைப்படத்தோடு பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி அமிர்தா
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியலில் பாக்யாவிற்கு மருமகளாகவும் எழிலின் மனைவியாகவும் நடித்து வருபவர் தான் ரித்திகா என்ற அமிர்தா. இவர் முதன்முதலாக "ராஜா ராணி" சீரியலில் தான் அறிமுகமானார்.
அதற்குப் பிறகு தற்போது பாக்யலட்சுமி சீரியலில் தான் நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் மென்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோபியின் பதிவு
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் ரித்திகாவிற்கு பதிலாக காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிக்கும் அக்ஷிதா தான் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரித்திகாவில் விலகல் குறித்து கோபி மறைமுகமாக பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் ரித்திகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “எங்கிருந்தாலும் வாழ்க” என வாழ்த்தி பதிவிட்டிருக்கிறார்.