பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் மருமகள்: இனி அவருக்கு பதில் இவர் தானா?
விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் மருமகளாக நடித்து வரும் ரித்திகா தற்போது சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி ரித்திகா
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியலில் பாக்யாவிற்கு மருமகளாகவும் எழிலின் மனைவியாகவும் நடித்து வருபவர் தான் ரித்திகா என்ற அமிர்தா. இவர் முதன்முதலாக "ராஜா ராணி" சீரியலில் தான் அறிமுகமானார்.
அதற்குப் பிறகு தற்போது பாக்யலட்சுமி சீரியலில் தான் நடித்து வருகிறார். அவர் இது மட்டுமல்லாமல் குக் வித் கோமாளியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைத்து அத்தனை ரசிகர்களை தனக்கென உருவாக்கிக் கொண்டார்.
அப்படி தனக்கென பல ரசிகர்களை உருவாகிக் கொண்டவர் பாக்கியலட்சுமி சீரியலில் மென்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவருக்கு பதில் இவர்
ரித்திகா சீரியலில் இருந்து விலகப் போகவதாக பல தகவல்கள் முன்னதாக பல வெளியாகியிருந்த போதிலும் இவர் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில் தற்போதும் அவர் சீரியலில் இருந்து வெளியேறப்போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த சீரியலில் இவருக்கு பதில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிக்கும் அக்ஷிதா அசோக் தான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |