காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் இனியா- ஈஸ்வரிக்கு ராதிகா கொடுத்த பதிலடி- மாட்டிக் கொள்வார்களா?
எழில் பட வெளியீட்டு விழாவில் இனியா காதலனுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஈஸ்வரி, பாக்யா மற்றும் வீட்டிலுள்ள அனைவரும் எழிலின் திரைப்பட விழாவிற்கு செல்கிறார்கள். அப்போது கோபியிடம் இருந்து விவாகரத்து பெற்ற ராதிகாவும் அந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
இது குறித்து பாக்கியாவிடம் ஈஸ்வரி கேட்ட போது, “இது என் மகன் நிகழ்வு, அவன் முன்னேற்றத்தை பார்ப்பதற்காக அழைத்தேன். வேறு எந்த நோக்கமும் இல்லை..” எனக் கூறுகிறார்.
விவாகரத்து பெற்று பிரிந்த ராதிகா
அதன் பின்னர், இனியா குடும்பத்துடன் செல்பி எடுக்க ராதிகாவையும் அழைக்கிறார். அவர் வராமல், “நான் போட்டோ எடுக்கிறேன்..” என அந்த குடும்பத்தை விட்டு விலகியதை அழகாக காட்டியிருந்தார்.
கோபி- ராதிகாவின் விவாகரத்து குறித்து பாக்கியா, செல்வியுடன் ராதிகா அமர்ந்து ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார். இனி எக்காலமும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் கூறுகிறார்.
அத்துடன், பாக்கியாவும்,“ நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்கிறேன். எனக்கும் இன்னொரு திருமணம் வேண்டாம்..” என உறுதியாக கூறிவிடுகிறார். இவர்களில் செல்வி மாத்திரம் அவரின் கணவருக்கு ஆதரவாக பேசுகிறார்.
காதலருடன் அன்பை பரிமாறிய இனியா
இந்த நிலையில், எழிலின் நிகழ்விற்கு இனியா அவருடைய காதலரை வரவழைத்து அவருடன் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். அத்துடன் அமரன் பட பாடலை போட்டு இருவரும் தங்களின் அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள்.
நடன போட்டியில் இருந்து சமூக வலைத்தளங்களில் இனியா பற்றி பேச்சுக்கள் பரவலாக உள்ளது. இந்த சமயத்தில் இனியாவிற்கான காதலரை சீரியல் குழு அறிமுகம் செய்துள்ளது.
இவர்களின் காதல் கதை இனி எப்படி செல்லும் என்பதனை தொடர்ந்து எபிசோட்களில் பார்க்கலாம். இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |